Saturday, 24 November 2012
Friday, 2 November 2012
என் அம்மாவுக்கு
நிலவின் முன்னிலையில் குழந்தைக்கு உணவு ஊட்டி
மகிழும் தாய் அமாவாசை அன்று
வீட்டினுள்ளே இருந்து விட...
குழந்தை மட்டும் வெளியே ஓடி விட்டு
உள்ளே வந்து மழலை மொழியில்......
"நீ நிலாச்சோறு ஊட்டி ஊட்டி
நிலாவும் என்னை போல் வளந்ததம்மா....
நீ வெளியே வராததால்
ஏனோ அது கரைந்து போயிடிச்சிம்மா....
எனக்கொரு அம்மா நீதானம்மா
அவளுக்கு பாட்டி மட்டும்தானே அம்மா...
கன்னத்தில் எனக்கொரு முத்தமம்மா-பாவம்
காற்றில் அவளுக்கு ஒன்று தந்துடும்மா...
எனக்கு ஒரு வாய் சாதம் போதுமம்மா-மீதி
எல்லாம் அவளுக்கு தந்திடலாம்மா...
தொட்டுக்க எதுவும் வேண்டாம்மா
பாட்டி சுட்ட வடை இருக்குதாம்மா ....
வெளியே வந்து பாரம்மா
நீ வந்தால்தான் அதுவும் வருமாம்மா..."
Thursday, 25 October 2012
தோழி
உயிர் தோழியே !
உன் சிரிப்பை காண தானே
காத்து கொண்டு நிற்கிறேன்
ஆறேழு நாளாக
காணாமல் தவிக்கிறேன்
நீ வரும் வழியை நோக்கி
விழியை வைக்கிறேன்
உன் திட்டு இல்லாமல்
தூக்கம் வராமல் நடு இரவினில் விழிக்கிறேன்
தாயைப் போல தோழியை
இதயத்தில் சுமக்கிறேன்
காலம் போக போக
கைக்குட்டையை நனைத்துக் கொண்டு இருக்கிறேன் ...
♥♥♥miss you my dear friend♥♥♥
(நண்பனுக்காக எழுதி தந்தது )
உன் சிரிப்பை காண தானே
காத்து கொண்டு நிற்கிறேன்
ஆறேழு நாளாக
காணாமல் தவிக்கிறேன்
நீ வரும் வழியை நோக்கி
விழியை வைக்கிறேன்
உன் திட்டு இல்லாமல்
தூக்கம் வராமல் நடு இரவினில் விழிக்கிறேன்
தாயைப் போல தோழியை
இதயத்தில் சுமக்கிறேன்
காலம் போக போக
கைக்குட்டையை நனைத்துக் கொண்டு இருக்கிறேன் ...
♥♥♥miss you my dear friend♥♥♥
(நண்பனுக்காக எழுதி தந்தது )
Tuesday, 23 October 2012
உன்னில் நான் (சிறுப் பகுதி )
உன் காதோடு வாரிய
கூந்தல் நான்தான்
அடங்காமல் பறக்கிறதே
முகத்திலே அலையும் தானாய்
உதட்டோரம் வருகிறதே..
உன் கையிலே
அழகு நான்தான்
விரல் நகமாய்
வெட்டிட இல்லை
வைர மங்கையின் கையில்
தங்க மோதிரமாய் நானும்
கை கோர்ந்தே என்றும் இருக்க....
உன் கண்ணிலே
அழகு நான்தான்
அழுகையிலே மையாய்
கரைந்திட இல்லை
கண்ணிமையாய் இருந்திட வேண்டும்
உன் கண்ணீரை கட்டிப் போட....
உன் கண்ணீரை கட்டிப் போட....
உயிரில்லா உறவுகள்.. (சிறுப் பகுதி )
நீ முகம் பார்க்கும் கண்ணாடிக்கு மட்டும்
கண் இருந்திருந்தால்
கண்டிப்பாக கண்ணீர் விட்டிருக்கும்
எத்தனை முறை உன்னை ரசிப்பதில்
என்னிடம் தோற்றிருக்கும்
உன் காதணிக்கு மட்டும்
காது இருந்திருந்தால்
கண்டிப்பாக என்னை காதலித்திருக்கும்
எத்தனை முறை என் காதலை சொல்லும்போது
உன் காதருகே அது கேட்டிருக்கும்
கண் இருந்திருந்தால்
கண்டிப்பாக கண்ணீர் விட்டிருக்கும்
எத்தனை முறை உன்னை ரசிப்பதில்
என்னிடம் தோற்றிருக்கும்
உன் காதணிக்கு மட்டும்
காது இருந்திருந்தால்
கண்டிப்பாக என்னை காதலித்திருக்கும்
எத்தனை முறை என் காதலை சொல்லும்போது
உன் காதருகே அது கேட்டிருக்கும்
Monday, 22 October 2012
மழையில் நான்
பாண்டிச்சேரிக் கடற்கரையில் தூறும் மழையில்
ஒரு கையில் குடையுடன்
மறுக்கையில் காரக் கடலையுடன்
இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு நான் ....... . ( சிறுப் பகுதி )
கருத்த மேகம்
சிவந்த பெண்கள்
ஈரமான கூந்தல்
ஈரமாகாத இதழ்கள்
தூறும் மழை
துடிக்கும் அலை
இனிக்கும் மனசு
காரும் உதடு
சிரிக்கும் காற்று
சிலிர்க்கும் இளைஞர்
தனிமையில் நான்
நினைவினில் நண்பர்கள்
கலங்கா மழை நீர்
கலங்கிய கண்ணீர்
இடியில் பாடும்
இளையராஜா பாடல்
தனிமையில் நான்
நினைவினில் நண்பர்கள்
கலங்கா மழை நீர்
கலங்கிய கண்ணீர்
கையில் குடை
நனைந்த இதயம்..........
......................................................... மதன் ஹிமாத்ரி :-) ............. ☺♥
Wednesday, 29 August 2012
Saturday, 25 August 2012
Friday, 24 August 2012
Thursday, 23 August 2012
Friday, 17 August 2012
Thursday, 16 August 2012
தண்டனை
எத்தனை அடிகள் வேண்டுமானாலும் சரி
என் கன்னத்தில் அடி
ஏற்றுக் கொள்கிறேன்
உன் ஆயுதம் உன் உதடுகளெனில்.....
Thursday, 2 August 2012
Saturday, 30 June 2012
விதி
நீ செடியை பிடுங்கினாலும் கவலை இல்லையாம்...
இலையும் பூவும் பார்த்த உன் முகத்தை காண வரம் வாங்கியதாய் எண்ணி விதியை முடித்துக்கொள்கின்றன வேர்கள்....
இலையும் பூவும் பார்த்த உன் முகத்தை காண வரம் வாங்கியதாய் எண்ணி விதியை முடித்துக்கொள்கின்றன வேர்கள்....
உன் கால் கொலுசு
நீ என் அருகில் வரும்போது அமைதியாக இருக்கும் உன் கால்கொலுசு
நீ என்னைவிட்டு வேகமாக விலகும்போது மட்டும் சப்தமாக
என்னை ஏளனம் செய்கிறதே!!!
நீ என்னைவிட்டு வேகமாக விலகும்போது மட்டும் சப்தமாக
என்னை ஏளனம் செய்கிறதே!!!
Subscribe to:
Posts (Atom)





