Saturday, 30 June 2012

விதி

நீ செடியை பிடுங்கினாலும் கவலை இல்லையாம்... 
இலையும் பூவும் பார்த்த உன் முகத்தை காண வரம் வாங்கியதாய் எண்ணி விதியை முடித்துக்கொள்கின்றன வேர்கள்....

உன் கால் கொலுசு

நீ என் அருகில் வரும்போது அமைதியாக இருக்கும் உன் கால்கொலுசு
நீ என்னைவிட்டு வேகமாக விலகும்போது மட்டும் சப்தமாக
என்னை ஏளனம் செய்கிறதே!!!

உன் கோவம்

கோவம் வந்தால்தான் மூக்கின் மேல் வியர்க்கும் என்றால் உன் மூக்குத்தி குளிப்பதே இல்லையா?