உன் காதோடு வாரிய
கூந்தல் நான்தான்
அடங்காமல் பறக்கிறதே
முகத்திலே அலையும் தானாய்
உதட்டோரம் வருகிறதே..
உன் கையிலே
அழகு நான்தான்
விரல் நகமாய்
வெட்டிட இல்லை
வைர மங்கையின் கையில்
தங்க மோதிரமாய் நானும்
கை கோர்ந்தே என்றும் இருக்க....
உன் கண்ணிலே
அழகு நான்தான்
அழுகையிலே மையாய்
கரைந்திட இல்லை
கண்ணிமையாய் இருந்திட வேண்டும்
உன் கண்ணீரை கட்டிப் போட....
உன் கண்ணீரை கட்டிப் போட....
No comments:
Post a Comment