Saturday, 24 November 2012
Friday, 2 November 2012
என் அம்மாவுக்கு
நிலவின் முன்னிலையில் குழந்தைக்கு உணவு ஊட்டி
மகிழும் தாய் அமாவாசை அன்று
வீட்டினுள்ளே இருந்து விட...
குழந்தை மட்டும் வெளியே ஓடி விட்டு
உள்ளே வந்து மழலை மொழியில்......
"நீ நிலாச்சோறு ஊட்டி ஊட்டி
நிலாவும் என்னை போல் வளந்ததம்மா....
நீ வெளியே வராததால்
ஏனோ அது கரைந்து போயிடிச்சிம்மா....
எனக்கொரு அம்மா நீதானம்மா
அவளுக்கு பாட்டி மட்டும்தானே அம்மா...
கன்னத்தில் எனக்கொரு முத்தமம்மா-பாவம்
காற்றில் அவளுக்கு ஒன்று தந்துடும்மா...
எனக்கு ஒரு வாய் சாதம் போதுமம்மா-மீதி
எல்லாம் அவளுக்கு தந்திடலாம்மா...
தொட்டுக்க எதுவும் வேண்டாம்மா
பாட்டி சுட்ட வடை இருக்குதாம்மா ....
வெளியே வந்து பாரம்மா
நீ வந்தால்தான் அதுவும் வருமாம்மா..."
Subscribe to:
Posts (Atom)
