Thursday, 25 October 2012

தோழி

உயிர்  தோழியே !
உன் சிரிப்பை  காண தானே
காத்து கொண்டு   நிற்கிறேன்
ஆறேழு நாளாக
காணாமல் தவிக்கிறேன்
நீ வரும் வழியை நோக்கி 
விழியை வைக்கிறேன்
உன் திட்டு இல்லாமல்
தூக்கம் வராமல் நடு இரவினில்  விழிக்கிறேன்
தாயைப் போல தோழியை
இதயத்தில் சுமக்கிறேன்
காலம் போக போக
கைக்குட்டையை  நனைத்துக் கொண்டு இருக்கிறேன் ...
♥♥♥miss you my dear friend♥♥♥
(நண்பனுக்காக எழுதி தந்தது )

Wednesday, 24 October 2012

படத்திற்க்கு ஏற்ற வரிகள் எழுத நண்பர் Karrthik Kind Heartedயின் போட்டி...............

Tuesday, 23 October 2012

உன்னில் நான் (சிறுப் பகுதி )

உன் காதோடு வாரிய
கூந்தல் நான்தான்
அடங்காமல்  பறக்கிறதே 
முகத்திலே அலையும் தானாய் 
உதட்டோரம் வருகிறதே..  



உன் கையிலே
அழகு நான்தான் 
விரல் நகமாய் 
வெட்டிட இல்லை 
வைர மங்கையின் கையில் 
தங்க மோதிரமாய் நானும் 
கை கோர்ந்தே என்றும் இருக்க....




உன் கண்ணிலே 
அழகு நான்தான் 
அழுகையிலே மையாய் 
கரைந்திட இல்லை 
கண்ணிமையாய் இருந்திட வேண்டும்
உன் கண்ணீரை கட்டிப் போட.... 

உயிரில்லா உறவுகள்.. (சிறுப் பகுதி )

நீ முகம் பார்க்கும் கண்ணாடிக்கு மட்டும் 
கண் இருந்திருந்தால்
கண்டிப்பாக கண்ணீர் விட்டிருக்கும்
எத்தனை முறை உன்னை ரசிப்பதில்
என்னிடம் தோற்றிருக்கும்

உன் காதணிக்கு மட்டும்
காது இருந்திருந்தால்
கண்டிப்பாக என்னை  காதலித்திருக்கும்
எத்தனை முறை என் காதலை சொல்லும்போது
உன் காதருகே அது கேட்டிருக்கும்

  

Monday, 22 October 2012

மழையில் நான்

பாண்டிச்சேரிக் கடற்கரையில் தூறும் மழையில்
ஒரு  கையில் குடையுடன்  
மறுக்கையில் காரக் கடலையுடன்
இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு  நான் ....... . ( சிறுப் பகுதி ) 


கருத்த மேகம் 
சிவந்த  பெண்கள் 
ஈரமான கூந்தல் 
ஈரமாகாத இதழ்கள்  
தூறும் மழை 
துடிக்கும் அலை 
இனிக்கும் மனசு 
காரும் உதடு 
சிரிக்கும் காற்று 
சிலிர்க்கும் இளைஞர்

இடியில் பாடும் 
இளையராஜா பாடல்

தனிமையில் நான்
நினைவினில் நண்பர்கள்
கலங்கா மழை நீர்
கலங்கிய கண்ணீர்   
கையில் குடை 
நனைந்த இதயம்..........
......................................................... மதன் ஹிமாத்ரி   :-) .............     ☺♥